கம்பளையில் காணாமல் போயிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் உடலம் இன்று மதியம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
22 வயதான இளம் பெண்ணின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை நீதிமன்ற நீதவான் முன்னிலையில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட கம்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியை கொலை செய்ததாககூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக அவர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் சந்தேகத்துக்குரியவர் அந்த உடலத்தை அடக்கம் செய்த இடத்தை அடையாளம் காண்பித்துள்ளார்.