சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் கீழ் இலங்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்புக்களை மீளக் கட்டியெழுப்புவதாகும் என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமும் இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலும் இணைந்து பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தவும் வெளித்துறையை கட்டுக்குள் வைத்திருக்கவும் இணைந்து செயல்படும் என CBSL தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு 2023 மார்ச்சில் 2.69 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக CBSL மேலும் குறிப்பிட்டுள்ளது.