கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தரகர்கள் போல் காட்டி பணம் பறித்த மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
வரிசையில் காத்திருக்காமல் நிர்ணயிக்கப்பட்ட முறைக்கு புறம்பாக கடவுச்சீட்டை பெற்றுத்தருவதாக சந்தேகநபர்கள் தலா 25,000 ரூபா கடவுச்சீட்டு பெற வருவோர்களிடம் வசூலித்தமை தொடர்பிலேயே இவ்வாறான கைது இடம்பெற்று வருகின்றது.