கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 32,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நாடு முழுவதும் உள்ள சுமார் 59 MOH பிரிவுகளை டெங்கு அபாயகரமான பகுதிகளாக அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், கல்முனை, புத்தளம், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவல் அதிகரிக்க கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது. (யாழ் நியூஸ்)