சமூக ஊடகங்களில் வெளிப்படையான பாலியல் அறிக்கைகளுடன் சிறுமிகளின் புகைப்படங்களைப் பகிர்ந்ததற்காக 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூலில் போலியான சுயவிவரத்தைப் பயன்படுத்தி தனது செயற்பாடுகளை முன்னெடுத்த சந்தேகநபர் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனமொன்றின் ஊழியரான குறித்த சந்தேக நபர் யடவர, வத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் மே 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)