மொஹமட் நாசிர் பாயிஸ் என்ற 29 வயது நபரான பேக்கரி உரிமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான பேக்கரி உரிமையாளர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்காக கல்கிஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.