முதலை வடிவில் தயாரிக்கப்பட்ட 'கிம்புலா பணிஸ்' எனப்படும் பணிஸ் வகை ஒன்று 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவமொன்று குருநாகல் பகுதியில் பதிவாகியுள்ளது.
அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ, படிகார மடுவ பிரதேசத்திலுள்ள மகளிர் சங்கமொன்றுக்கு நிதித்திரட்டுவதற்காக நடத்தப்பட்ட கண்காட்சி, ஒன்றில் குறித்த முதலை பணிஸ் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
அங்கு ஏலம் விடப்பட்ட முதலை பணிஸ், 2 அடி 2 அங்குலம் நீளம் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
குருநாகல் கொலனியா விகாரையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் இளைஞர்கள் குழுவொன்று அந்த பணிஸை விலை கொடுத்து வாங்கிருப்பது குறிப்பிடத்தக்கது.