களுத்துறை பிரதான வீதியில் ஐந்து மாடி ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள புகையிரத பாதைக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண சடலம் மீட்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (06) இரவு குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் களுத்துறை நாகொட பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் குறித்த மாணவி மற்றும் இளைஞன் ஒருவருடன், மேலுமொரு இளம் தம்பதிகள் ஹோட்டலுக்கு வந்து ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளில் தங்கியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் மீட்கப்படுவதற்குள் உயிரிழந்த சிறுமியுடன் வந்த ஏனைய தம்பதிகளும் இளைஞரும் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த விடுதியில் தங்கியிருந்த மற்றைய தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சிறுமியுடன் தங்கியிருந்த இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது கொலையா என்பது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)