அக்குரணை நகரில் குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் என பொய்யான தகவலை வழங்கிய 21 வயது மெளலவி இஸ்ஸதீன் முஹமட் சாஜித் எனும் நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர், புதுகடை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் குறித்த நபரை மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, புதுகடை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.