மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சுங்கம் எதிர்பார்த்த வருமான இலக்கை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைத்தொழில், வீட்டு பாவனை மின்சார உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடைகளைத் தளர்த்துமாறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, நிதி அமைச்சு மாத்திரமின்றி, மத்திய வங்கியும் தீவிரமாக ஆராய்ந்து, எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.