காலி - நெலுவ பிரதேசத்தில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவன், வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
2 வயது மற்றும் 8 மாதங்களுமேயான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) பிற்பகல் முதல் காணாமல்போன இந்த சிறுவனை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டிருந்தனர்.
அளுத்கம - தர்கா நகரைச் சேர்ந்த இந்தச் சிறுவன் புத்தாண்டுக்காக நெலுவ பிரதேசத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு தாயுடன் சென்றிருந்தபோது காணாமல் போயுள்ளான்.
இந்தநிலையில், இன்று காலை குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக நெலுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெலுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.