ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் சவுதி அரேபியாவில் இருந்தும் இன்னும் பல முஸ்லிம் நாடுகளில் இருந்தும் இலங்கை மக்களுக்கு
அன்பளிப்பாக ஒரு தொகை பேரீத்தம் பழங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதுவரை ரமலான் மாதங்களில் வழங்கப்பட்டு வந்த பேரீத்தம் பழங்கள் மக்களுக்கு சென்றடைவதிலும் மக்களை சென்றடைந்த பேரீதம் பழங்களின் தரத்திலும் சிலவேளைகளில் சிக்கல்கள் காணப்பட்டன.
ஒரு முறை வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்கள் உண்ன முடியாத அளவிற்கு மண் காணப்பட்டது. இன்னொரு முறை வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்கள், காய்ந்து போனவையாகவும், தரத்தில் குறைந்தவையாகவும் காணப்பட்டது.
பொதுவாக அரேபிய கலாச்சாரத்தினை பொறுத்தவரையில் தான் எதை உண்பேனோ,
அதை அடுத்தவனுக்கும் விரும்புவார்கள்.
நீ எதை விரும்புகின்றாயோ அதையே உன் சகோதரனுக்கும் விரும்பு என்ற நபி மொழியை இறுக்கமாக பின்பற்றுவார்கள்.
இன்றும் கூட தனக்கு கீழ் வேலை செய்யும் வேலைக்காரனை எஜமான் சாப்பிடும் போது அழைத்துக் கொள்வது, தான் எதை உண்பேனோ அதை நேரம், அதே உணவு வகைகளை தனது வேலைக்காரனுக்கு கொடுப்பது அவர்களின் ஒரு சிறந்த பண்பு.
இது ஜாஹிலியா காலம் முதல் அரபு மக்களிடத்தில் இருந்த ஒரு சிறந்த பண்பாகும்.
எனவே இதன் பின்னணி என்னவென்பது அல்லாஹ் அஹ்லம். தெளிவில்லாத விடயம். இது இவ்வாறு இருக்க, இம்முறை இலங்கை மக்களுக்காக சவுதி அரேபியா அரசாங்கம் 50 தொன் பேரீத்தம் பழங்களை வழங்கி இருந்ததாக செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து சில பின் தங்கிய பகுதிகள் உட்பட பல பகுதிகளில் பேரீத்தம் பழங்கள் வழங்கப்படவில்லை என்ற பிரச்சினையுடன் சர்ச்சைகள் ஆரம்பித்தன.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட 50 தொன் பேரீத்தம் பழங்களில் 30 தொன் பேரீத்தம் பழங்களை சவுதி அரேபியா தூதரகம் மீளப்பற்றுக் கொண்டது என்ற செய்தியும் வெளியாகின.
இதை ஒரு மெளலவி ஒருவர் இது தொடர்பாக அமைச்சருடன் தொலைபேசியில் கதைத்த போதும் அமைச்சர் இதை தெரிவித்தார்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் வழங்கப்பட்ட அன்பளிப்பை மீண்டும் திருப்பி பெற்றுக் கொள்வது ஒரு அறுவக்கதக்க ஒரு செயலாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் அரபுகள் ஒரு தங்க குவியலை அன்பளிப்பாக வழங்கினால் கூட திரும்பப் பெற்றுக் கொள்ளும் வழக்கம் அவர்களிடத்தில் இல்லை. அரபுகள் அந்த விடயத்தில் உறுதியாக இருப்பார்கள்.
எனவே இது சம்பந்தமாக சவுதி அரேபியா தூதரகம் எந்தவிதமான அறிக்கைகளையும் வெளியிடாத காரணத்தினால் இது சம்பந்தமான முடிவுகளையும் பின்னணிகளையும் தெளிவுகளையும் நாம் பெற்றுக் கொள்ள முடியாது உள்ளது.
இதற்கு முதல் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளில் பல சபைகளில் குளறுபடிகள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பின்னர் வெளிவந்த செய்திகளில் இலங்கை மக்களுக்கு விநியோகிக்க 36 தொன்கள் வழங்கப்பட்டதாகவும், பின்னர் மீ்ண்டும் மேலும் 14 தொன்கள் மொத்தமாக 50 தொன்கள் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்விரு செய்திகளும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளமை குறிப்பிடத்தகதாகும்.
எனவே இது விடயத்தில் இலங்கை அதிகாரிகள் வழங்கும் விளக்கங்களிலேயே நாம் திருப்தி அடைய வேண்டியுள்ளது.
இலங்கை அரச அதிகாரிகள் , நிறுவனங்கள், மற்றும் சபைகளை ஆகியவற்றில் தொடரும் ஊழல்கள் காரணமாக இவற்றின் முடிவுகளை மக்கள் ஏற்றுக்கொள்வதில் நம்பிக்கை தன்மையற்ற நிலையே காணப்படுகின்றது.
எவ்வாறாயினும் பேரீத்தம் பழங்களை வாங்குபவரின் நோக்கம் புனிதமிக்க ரமலான் மாதத்தில் இது மக்களுக்கு பயன் பெற வேண்டும் என்பதாகும்.
எனவே ஒரு போதும் இவை மக்கள் தேவைக்கு ஏற்றால் போல் வழங்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். ஒன்றேல் ரமலான் இறுதியில் வழங்கப்படும். அல்லது ரமலான் மாதம் முடிந்த பின்பு வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன.
சுருக்கம் என்னவெனில் பள்ளிவாசல்கள், அதை அண்டி வாழும் முஸ்லிம் குடும்பங்கள் சம்பந்தமான அத்தனை தரவுகளும் தம் வசம் காணப்படுடம் இதேவேளை, இலவசமாக வழங்கப்பட்ட ஒரு பொருளை, மக்களுக்கு சீராக வழங்கக்கூடிய ஒரு பொறிமுறையை, கைக்கொள்ள முடியாத சபையாக முஸ்லிம் சபைகள் காணப்படுவது கவலைக்குறிய விடயமாகும்.
ஒரு சாதாரண தரம் படித்த மாணவனால் சாதிக்க முடிந்த, இவ்விடயத்தை பல உயர் நிலை அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சபையால் செய்ய முடியவில்லை என்பதே உண்மை.
இறுதியாக வீட்டிற்குள் பேசி தீர்கப்படவேண்டிய பிரச்சினை வீதிக்கு வந்ததே நிஜம் .
எனவே இந்த சபைகள் இதை ஒரு பாடமாக கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களிலாவதுஇவற்றை மக்கள் தேவைக்கு சென்றடைய கூடிய வகையில்
ஒரு பொறிமுறை அமைத்துக் கொள்வது
சாலச் சிறந்ததாகும்.
-பேருவளை ஹில்மி