கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இன்று (12) காலை கொழும்பு செட்டியார் தெருவின் நிலவரப்படி 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 161,333 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதனிடையே 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 176,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் நிலையானதாக உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் தங்க விலையில் இவ்வாறான நிலவரம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.