நாட்டில் பலாப்பழத்தை ஊக்குவிக்கும் புதிய முயற்சி! ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் பலாப்பழத்தை ஊக்குவிக்கும் புதிய முயற்சி! ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!


‘குவன் ஹமுதா ஹெரலி பெரலி’ எனும் தொனிப்பொருளில் நாடு பூராகவும் முப்பது மில்லியன் பலா மரங்களை நடும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (01) அனுராதபுரம் விமானப்படை தளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பலாப்பழ சந்தையை உருவாக்கி இலங்கை மக்கள் மத்தியில் பலாப்பழத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் கீழ், இந்த வருடத்திற்குள் எழுபத்தைந்தாயிரம் பலா மரங்கள் நடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பலாப்பழத்தோட்டம் தொடர்பாக எழுதப்பட்ட ‘குவன் ஹமுதா ஹெரலி பெரலி’ என்ற புத்தகமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.


இந்தப் புத்தகத்தில் பலாப்பழம் சாகுபடி மட்டுமின்றி, அது தொடர்பான பொருட்கள் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.


பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.