கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டியின் போது இராணுவ வீரர் ஒருவர் சைக்கிள் ஓட்டிச் சென்ற மற்றுமொருவரைத் தள்ளிவிட்டு பலத்த காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொஹுவல இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் என ஹிரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் அதே இராணுவ முகாமைச் சேர்ந்த கோப்ரல் மற்றும் சைக்கிள் ஓட்டும் அணியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறுதிக் கோட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தை எட்டிய மூன்று சைக்கிள் ஓட்டுநர்களுக்கு மத்தியில் இராணுவச் சிப்பாய் கையை நீட்டி தனக்கு முன்னால் சவாரி செய்த கோப்ரல் ஒருவரைத் தள்ளிவிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால், சைக்கிள் ஓட்டப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த 07 வயது குழந்தை மீது மோதியதில் கோப்ரல் கீழே விழுந்து, இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தை பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கோப்ரல் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)