அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.63 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 327.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஏனைய நாணயங்களுக்கெதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று உயர்வடைந்து காணப்பட்டது.