நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் சுமார் 7.2 ரிக்டர் அளவில் இன்று (24) காலை பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிர்சேதங்கள் குறித்து இதுவரையில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.