அமெரிக்காவும் இலங்கையில் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கு வழங்கவிருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சீனாவினால் கோரப்படும் 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் முப்பது இலட்சத்திற்கும் அதிகமான குரங்குகள் காணப்படுவதாகவும், குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களும் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வெளிநாடுகளுக்கு குரங்குகளை வழங்குவதே பொருத்தமானது எனவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என யாரும் கூறவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.