நாளை (07) முதல் அமுலுக்கு வரும் வகையில் சதொச நிறுவனம் 03 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இதற்கமைய தகரப்பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் டின் மீனின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய விலை 490 ரூபாவாகும்.
பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 97 ரூபாவாகும்.
அத்துடன், கோதுமை மா ஒரு கிலோகிராம் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் 225 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.