ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணைந்து இந்த ஆண்டு விவசாயிகளுக்கு யூரியா உர மானியத்தை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
15,000 மில்லியன் ரூபா பெறுமதியான யூரியா உரங்கள் மற்றும் விவசாய உபகரணங்களை விவசாய அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் பணிகள் நாளை (22) இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட 07 மாவட்டங்களில் அரை ஹெக்டேயருக்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிடும் 71,000 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 கிலோ யூரியா உர மூட்டைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
மேலும், நாட்டில் உயர்தர விதைகள் மற்றும் நெல் பதப்படுத்தும் புதிய தொழில்நுட்ப முறைகள் மற்றும் அவற்றிற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.