எடை அடிப்படையில் முட்டை விற்பனை செய்வது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைக்கு சாத்தியப்படாது என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படும் வரை தாம் அறிந்திருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு கிலோ முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (19) நள்ளிரவு வெளியிடப்பட்டது.
அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளை முட்டை ஒரு கிலோவொன்றின் விலை 880 ரூபாவாகவும் பழுப்பு முட்டை கிலோ ஒன்றின் விலை 920 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.