இன்ஸ்ட்ரக்ராமில் நமக்கு தெரிந்தவர்கள் தெரியாதவர்களின் கணக்கை ஹேக் செய்து, அதன்மூலம் வந்து பணம் கேட்பதும், புதிய ஒன்லைன் வியாபாரங்கள், ஷேர் மார்க்கெட், கிரிப்டோ கரன்ஸியில் லாபம் பார்க்க முடியும் எனக் கூறி பணம் பறிக்கின்றனர். எளிதாக பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் இம்மாதிரியான மோசடி நபர்களிடம் பணத்தை கொடுத்து இழந்துவிடுகின்றனர்.
பொறி வைக்கும் விதத்தில் இளம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் போலி கணக்குகளை தொடங்கி, அதில் ஆபாசமாகவோ அல்லது நம்பகத்தன்மை ஏற்படுத்தும் விதத்திலோ பழகி பணம் பறிக்கின்றனர்.
சிறு வியாபாரங்கள், கைவினைக் கலைஞர்கள் என்று கூறிக் கொண்டு போலிக் கணக்குகளில் வரும் மோசடியாளர்கள் சிலர், குறைத்த விலை என்று சொல்லி பொருட்கள் விற்கின்றனர். ஆனால் டிஸ்கவுன்ட் விலைக்கு ஆசைப்பட்டு ஆர்டர் செய்த பலரும், பொருள் வந்த பிறகே அது போலி என்பதை அறிகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் பொருட்கள் வாங்குவதற்கு முன்னர், அந்த கணக்கில் இதற்குமுன் மற்றவர்கள் வாங்கியிருக்கிறார்களா என்பதையும், அவர்களின் ரிவ்யூகளையும் தெரிந்து கொண்டு வாங்கவும்.
சமூக வலைதளத்தில் தெரிந்தவரின் ஐடியில் இருந்தே பணம் கேட்டோ அல்லது லிங்க்களை கிளிக் செய்யும்படி மெசேஜ் வந்தாலும், முதலில் அந்த நபரை தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும். அவராக இல்லாமல் இருக்கும் நிலையில் அதனை புறக்கணித்துவிட வேண்டும்.
இன்ஸ்டாவில் அறிமுகமில்லாத நபர்கள் நண்பர்கள் போல, காதலிப்பது போல பேசினால் மிகவும் எச்சரிக்கை தேவை. பலர் இம்மாதிரியான நபர்களிடம் சிக்கி பணத்தையும் இழந்து, வெளியில் கூறவும் முடியாத நிலையில் உள்ளனர்.
ஒரு தவறான லிங்க்-ஐ கிளிக் செய்தாலே, நீங்கள் பணத்தை இழக்கும் ஆபத்து அல்லது உங்கள் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்படும் நிலை ஏற்படும் என்பது கசப்புமிக்க உண்மை.
எனவே சமூக ஊடகங்களை பாவிக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருந்து, இதுபோன்ற ஸ்கேம்களில் மாட்டிக் கொள்ளாமல் இருப்போம். (யாழ் நியூஸ்)