ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரும், அதனை அச்சிட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை - கட்டுவன காவல்துறையினர் தெரிவித்தனர்.
கட்டுவன காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கட்டுவன - பிந்தனையில் அமைந்துள்ள சூதாட்ட நிலையம் ஒன்று நேற்று (11) காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன், போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 17 போலி 5,000 ரூபா நாணயத்தாள்களை காவல்துறையினர் மீட்டனர்.
குறித்த சந்தேகநபரிடம் நடத்திய விசாரணைக்கமைய, கட்டுவன நகரில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதன்போது, போலி நாணய தாள்களை அச்சடித்ததாக கருதப்படும் இயந்திரம் மற்றும் கணினி ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டனர்.