அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்குள் வெளியாட்கள் நுழைந்து பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கு நேற்று (11) மேலதிக வகுப்பு இடம்பெற்றும் போதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது இரு மாணவர்கள் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் கொடூரமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இரண்டு மாணவர்களும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.