இலங்கைக்கு கடன் வழங்கிய தனியார் கடன் வழங்குநர்கள் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் யோசனையை இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர்கள் வைத்திருக்கும் பத்திரங்களின் மதிப்பு 12 பில்லியன் டொலர்கள் என ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு தொடர்பாக எந்தத் தகவலும் வெளியிடப்படாது என்றும் அதில் 30 கடனாளர்களைக் கொண்ட குழு உள்ளடங்குவதாகவும் அறிக்கை கூறுகிறது.
கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு பற்றி கலந்துரையாட பத்திரதாரர்களும் அரசாங்க அதிகாரிகளும் வாஷிங்டனில் சந்தித்ததாகவும், இரு தரப்பிலிருந்தும் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்கள் வந்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)