தரமற்ற நிறுவை மற்றும் அளவை கருவிகளைப் பயன்படுத்தும் விற்பனையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்த அளவைகள் மற்றும் நிறுவைகள் ஒழுங்குபடுத்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படுவதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் சுஜீவ அக்குரன் திலக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொதுமக்கள் நிறுவை மற்றும் அளவை கருவிகளின் தரம் குறித்து திணைக்களத்திற்கு 0112 18 22 53 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.