2022ஆம் கல்வி ஆண்டின் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், மாணவர்களை 06ஆம் தரத்திற்கு பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பித்தல், இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 08ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரையில், இணையத்தள முறைமையில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் பாடசாலைகள் தொடர்பான அட்டவணையைப் பார்வையிடவும், மேன்முறையீட்டை முன்வைக்கவும், www.moe.gov.lk என்ற தமது இணையத்திற்கு பிரவேசிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.