ரூ. 5000 பெறுமதியான 27 போலி நாணயங்களுடன் ஒருவரை மோதர பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சனிக்கிழமை (15) மோதர, றொக்ஹவுஸ் லேனில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை சோதனையிட்ட போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) போலி நாணயத்தாள் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த பண்டிகைக் காலத்தில் போலி நாணயங்களை சந்தையில் அறிமுகப்படுத்த முயற்சிக்கும் மோசடியாளர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொள்கின்றனர்.