சிங்கள இந்து புத்தாண்டை முன்னிட்டு விசேட பயணிகள் போக்குவரத்து சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கொழும்பு மத்திய பஸ் நிலையம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பிரதான நகரங்களில் இருந்து விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேவைக்கு ஏற்ப தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
சில விசேட ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)