இணையத்தளத்தில் இருந்தும் பல்வேறு நாடுகளில் மக்களை ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் 39 சீன பிரஜைகள் அடங்கிய குழுவொன்று அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அளுத்கம, களுஅமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்து இந்த இணைய மோசடிகளில் ஈடுபட்டு பெரும் தொகையை மோசடி செய்து வந்துள்ளனர்.
தூதரகங்களில் முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து பொலிசார் விசாரணை நடத்தி சீன பிரஜைகளை இன்று (01) கைது செய்தனர்.
மேலும் பல உயர் ரக ஸ்மார்ட்போன்கள், கணனிகள் மற்றும் பணத்தை ஆதாரமாக கைப்பற்றிய பொலிசார், 39 சந்தேக நபர்களையும் தனியார் பஸ்ஸில் அளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)