தனது மகளின் தலையில் அசிட் ஊற்றியதாக கூறப்படும் தந்தை மற்றும் அந்த தாக்குதலில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான மகள் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலத் சிங்கள காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் அதிக மதுபானம் அருந்துபானம் அருந்துபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் அடிக்கடி மதுபானம் அருந்திவந்து மகள் மற்றும் குடும்பத்தினரை துன்புறுத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த 25 வயதுடைய மகள், இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன், சந்தேகநபரான தந்தை 52 வயதுடையவர் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் எனவும், தாக்குதலை நடத்துவதற்காக தொழிற்சாலையிலிருந்து ஆசிட் திருடப்பட்டிருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)