கொழும்பு - கண்டி பிரதான வீதியில் நேற்று (4) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது உயிரிழந்த யுவதி தனது காதலனுடன் வரக்காபொல உடுவாக நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது, இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
படலேய, கஜுகம பிரதேசத்தில் வீதியோரத்தில் உள்ள கடையில் முந்திரி வாங்குவதற்காக யுவதியின் காதலன் உந்துருளியை நிறுத்தியுள்ளார்.
தனது காதலன் திரும்பிவரும் வரையில் வீதியோரம் உந்துருளிக்கு அருகில் குறித்த காத்திருந்தபோது, அதிவேகமாக கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து அவர் மீது மோதியுள்ளது.
அதன்பிறகு பேருந்து அருகிலுள்ள சிறு கால்வாயொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான ரசாஞ்சலி என்பவரே பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் தமது காதலனை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இராணுவத்தினருக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்த குறித்த பேருந்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.