நேற்றைய தினம் (22) அம்பாறை பகுதியில் 15 வயது சிறுவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அடையாளம் காணப்படாத சிறுவன் மாயதுன்ன பகுதியைச் சேர்ந்தவர். வீட்டுக்குள் வைத்திருந்த உரிமம் இல்லாத துப்பாக்கியால் அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது.
பாடசாலை முடிந்து வீடு திரும்பாத நிலையில் வீட்டின் பின்புறம் ஒதுக்குப்புறமான பகுதியில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறுவன் இறந்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். (யாழ் நியூஸ்)