இரத்தினபுரி அல் மக்கியா தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவி M.A.F அம்ரா செயலிழந்த பெட்டரிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், தொலைபேசியை மின் வெட்டு காலங்களில் சார்ஜ் செய்து கொள்ளவும் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்து சாதணைப்படைத்துள்ளார்.
பலங்கொடை ஜெய்லானி தேசிய பாடசாலையில் வருடாந்த வர்த்தக தினத்தை முன்னிட்டு இரத்தினபுரி பிரதேசத்தில் வர்த்தக பிரிவில் கல்வியை தொடரும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் புதிய நவீன பிரச்சினைகளுக்கு தீர்வாக உற்பத்தி ஒன்றை அறிமுகம் செய்யுமாறு மாணவர்களை கேட்டுகொண்டனர்.
இதன் போது அல் மக்கியா தேசிய பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் மில்ஹான் , வர்த்தக பிரிவுக்கு பொருப்பான ஆசிரியர் எம்.எம்.எம் நுஸ்ஸாக் அவர்களும் மாணவர்களுக்கு இந்த வர்த்தக நிகழ்வு தொடர்பாக விழிப்பூட்டப்பட்டதுடன் , புதிய நவீன உற்பத்தி தொடர்பாக ஆலோசனை மற்றும் வழிகாட்டல் முன்வைக்கப்பட்டது.
இதன் போது M.A.F அம்ரா என்ற மாணவி solar power bakcup என்னும் பெயரில் புதிய ஒரு உற்பத்தியை அறிமுகம் செய்தார். இதன் போது பலங்கொட ஜெய்லானி தேசிய பாடசாலையின் வர்த்தக நிகழ்வில் கலந்து கொண்ட பலங்கொட வலயக் கல்விப் பணிப்பாளர் G.G Abeywikrama அவர்களும், ஜெய்லானி தேசிய பாடசாலை பிரதி அதிபர், வர்த்தக பிரிவில் கற்பிக்கும் அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் பாராட்டினர்.
அதேபோன்று இந்நிகழ்ச்சியில் அம்ரா என்ற மாணவி முதலிடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த கண்டுபிடிப்பை அகில இலங்கைரீதியில் அறிமுகம் மற்றும் விநியோகம் செய்ய தனது சொந்த செலவில் நிதி உதவியையும் அனுசரணையும் வழங்குவதாக பலங்கொடை வலயகல்விப்பணிப்பாளர் G.G Abeywikrama குறிப்பிட்டார்.
இந்த உற்பத்தியை கண்டுபிடிக்க M.A அப்துல்லாஹ் என்ற மாணவன் யோசனை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த உற்பத்தியானது solar power bakcup என்று அறிமுகப்படுத்தப்படுவதோடு
⭕ இவ்வுற்பத்தி மூலம் எமக்கு நாம் பயன்படுத்தி பாவனை குன்றிக் காணப்படும் பற்றரிகளை மீள் பாவனைக்கு உட்படுத்த முடியும். மேலும் மின்குமிழ், தொலைபேசி என்பவற்றை மின்னேற்றம் (Charge) செய்யவும் முடியும்.
⭕ இவ்வுற்பத்தியானது சூரிய கதிர்களை பயன்படுத்தி இடம்பெறும் ஒரு சூழல்நேயமான உற்பத்தியாகும்.
⭕ இக்காலத்தின் பொருளாதார நிலைமைக்கு பொருத்தமான வகையில் மின்சார பாவனையை குறைப்பதற்கும், அதனை சேமிப்பதற்கும் உகந்த முறையில் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
🛑 எமது இவ்வுற்பத்தியானது குறைந்த விலையில் அதிகளவு பலனை தரக்கூடிய ஒரு முயற்சியாகும்.
Cost For The Product
Solar Power Backupஉற்பத்தியினை உற்பத்தி செய்தல், அதனை விநியோகம் செய்தல் மற்றும் ஊழியம் செய்யும் வேலையாற்கள் என அனைத்து விடயங்களுக்கும் இனங்க நாம் இவ்வுற்பத்தியினை *ரூபா 500* இற்கு விநியோகம் செய்யவுள்ளோம்.
☑️ ஒ௫ உற்பத்திக்கு பயன்படும் பொருட்களின் செலவு :- 300/=
☑️போக்குவரத்து மற்றும் ஊழியர் சம்பளத்திற்கு ஒதுக்கும்
தொகை(by one product) :- 100/=
☑️Profit :- 100/=
இவ்வுற்பத்தி மூலம் நாம் கவனம் செலுத்தும் பிரிவினர்கள்
0️⃣1️⃣ வாலிபர்கள்
0️⃣2️⃣ குடும்பத் தலைவர்கள்
முதலில் நாம் 1000 Solar Power Backup ஐ உற்பத்தி செய்யவுள்ளோம். அவற்றை இரத்தினபுரி மாவட்டம் முழுவதும் உள்ள வாலிபர்களையும் குடும்பத் தலைவர்களையும் கவ௫ம் விதத்தில் விநியோகிக்கவுள்ளோம்.
இவ்வுற்பத்தியினை சந்தைபடுத்தும் முறைகள்....
❎ விற்பனையாளர்கள் (By Sales Man)
❎ சமூக ஊடகம் (By Using Social media)
ஏன் Solar Power Backup ஏனைய உற்பத்திகளை விட சிறந்தது ❔
உதாரணமாக பற்றரிகளை எடுப்போமயானால் ஒனறு ரூபா 100 இற்கு விற்கப்படும். அதனை சுமார் 02 மாதத்திற்கு பயன்படுத்தலாம். சாதாரணமாக ஒரு வீட்டில் 10 பயன்படுத்துவார்கள் எனின் ஒ௫ வ௫டத்திற்கு ஏற்படும் மொத்த செலவு ரூபா 6000 ஆகும்.
வெறும் ரூபா500 ஆன இவ்வுற்பத்தியினை நாம் பெற்றால் ஒரு வ௫டத்திற்கு சுமார் 5500/= சேமிக்கலாம்.
இவ்வுற்பத்தி சாதகமான விளைவை த௫மாயின் நாம் Solar Pole இனையும் தயாரிக்கவுள்ளோம்...
இந்த உற்பத்தி தொடர்பான விளம்பரம் மக்கியா தேசிய பாடசாலையில் Commerce unit யூடீப் தளத்தில் பார்வையிடலாம்.
தகவல்
ஆசிரியர் எம். எம் . எம் நுஸ்ஸாக்
இர/அல் மக்கியா தேசிய பாடசாலை இரத்தினபுரி