இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணை எடுப்பு கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் இன்று (20) இடம்பெற்றது.
இதன்போதே, இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விகர்மசிங்க நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.