இன்று (01) நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கபடவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாவாகும் என அந்த கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.