இலங்கையில் மரக்கறிகளின் விலை மேலும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
கடந்த வார இறுதியில் இருந்து இவ்வாறு மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்து வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய சந்தை விலைகளின் படி, போஞ்சி கிலோ ஒன்றின் விலை, 250 ரூபாவிற்கும் குறைவான மதிப்பை பதிவு செய்தது.
பல பொருளாதார மத்திய நிலையங்களில் கரட்டின் மொத்த விலை 120 ரூபாய்க்கும் குறைவாக காணப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 120 ரூபாவாகவும், வெலிமடை உள்ளூர் உருளைக்கிழங்கு 200 முதல் 210 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை 95 முதல் 100 ரூபா வரை காணப்படுகின்றது.