அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக இன்று (08) வலுவான நிலையில் உள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 313.77 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்று 318.30 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 331.05 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது. இது நேற்று 335.75 ரூபாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.