உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திகதியை அறிவிப்பது தொடர்பாக நாளை (07) தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்திக்க எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
விஜித ஹேரத், பேராசிரியர் ஜீ.எல்.பீர்ஸ், மனோகணேசன், ரிஷாத் பதியுதீன், ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட 09 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், நாளை காலை 9 மணிக்கு தேர்தல்கள் தலைமைச் செயலகத்திற்குச் சென்று அது தொடர்பில் ஆலோசிக்கவுள்ளதாகவும் அவர்கள் தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய கடிதம் கீழே,