பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலையின் முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல மாணவர்களை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் பலாங்கொடை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த பாடசாலையின் அதிபர் அண்மையில் அந்த பகுதியில் உள்ள மற்றுமொரு பாடசாலைக்கு ஆசிரியராக கடமையில் அமர்த்தப்பட்டார். அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, அவர் மீதான முறைப்பாடு ஆராயப்பட்டு, இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அதிபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.