உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை, எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி மிக பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், அஞ்சல் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.