இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (15) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்றைய தினம் ரூ. 320.41 எனவும் இன்று ரூ. 325.26 எனவும் பதிவாகியுள்ளது.
அதேநேரம், நேற்றைய விற்பனை விலை 339.17 எனவும் இன்றைய விற்பனை விலை ரூ. 344.31 ஆகவும் பதிவாகின. (யாழ் நியூஸ்)