இன்றைய (09) நிலவரப்படி இலங்கையில் இம்மாத தொடக்கத்தை விட 24 கரட் தங்கத்தின் விலை 39,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் 24 கரட் தங்கத்தின் விலை 184,000 ரூபாவாக இருந்தது.
எனினும், இன்று 24 கரட் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கத்தின் விலை 170,000 ஆக இருந்ததுடன், தற்போது 134,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.