நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் அத்தியாவசிய மருந்துகள் என அனைத்து பொருட்களுக்கும் தேவையான அந்நிய செலாவணி தற்போது மத்திய வங்கியினால் வழங்கப்படுவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தேவையான அந்நிய செலாவணி வங்கி முறையின் ஊடாக பெறப்படுவதாகவும் அதன் கையிருப்பு 600 மில்லியன் டொலர்களாக வளர்ந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)