அமெரிக்கா டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (07) நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 318.30 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 335.75 ரூபாவாகவும் பதிவாயுள்ளது.
இதேவேளை, கடந்த வெள்ளைகிழமைன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 334.50 ரூபாவாகவும், விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
எவ்வாறாயினும், சில வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாவாக பதிவாகியிருந்தமை அவதானிக்க முடிகிறது.