இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கியின் தரவுப்படி , அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்று ரூ. 327.20 என்றும்,
இன்று ரூ. 332.06 என்றும், அதேநேரம், நேற்றைய விற்பனை விலை Rs. 346.37 என்றும் இன்றையது Rs. 351.51 என்றும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கமெர்ஷல் வங்கியின் நேற்றைய கொள்வனவு விலை ரூ. 332.96 ஆகவும் இன்றைய தினம் ரூ. 331.48 ஆகவும், நேற்றைய விற்பனை விலை ரூ. 351.50 ஆகவும், இன்றைய விற்பனை விலை ரூ. 355.00 ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேநேரம், சம்பத் வங்கியின் கொள்வனவு விலை நேற்றைய தினம் ரூ. 330 ஆகவும் இன்றைய தினம் ரூ. 335
ஆகவும், நேற்றைய விற்பனை விலை ரூ. 345 ஆகவும் இன்றைய விற்பனை விலை ரூ. 350 ஆகவும் பதிவாகின. (யாழ் நியூஸ்)