அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி இன்று (01) பாரிய ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
துறைமுகம், பெட்ரோலியம், மின்சாரம், நீர், வங்கி, பல்கலைக்கழகம் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளதோடு மேலும் பல தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இதன்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பிராந்திய ரீதியில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதுடன் தபால் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு பதிலாக ஆடைகளில் கறுப்பு பட்டை அணிந்து ஆதரவு வழங்குகின்றனர்.
அத்துடன், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குப் பதிலாக போராட்டத்தை நடாத்துவதன் மூலம் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவிக்க புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதுடன், இதன் காரணமாக ரயில்கள் தாமதமாகச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. (யாழ் நியூஸ்)