File Picture |
ஊவா பரணகம, மஸ்பன்ன கிராமத்தில் வீடொன்றில் குழந்தையில் பாதுகாப்புக்காக தொட்டிலை சுற்றி கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியில் சிக்கி ஏழு மாத பெண் சிசு உயிரிழந்துள்ளது.
படுக்கையில் இருந்து இவ்வாறு மரத்தால் செய்யப்பட்ட பாதுகாப்பு வேலி அமைப்பில் விழுந்ததில் ஏற்பட்ட காயங்களினால் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த குழந்தையின் தாய், குழந்தை குறித்த பாதுகாப்பு வேலியில் விழுந்து கிடப்பதைக் கண்டு, உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது, அவர் உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊவா பரணகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)