எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலியாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி முதல் மற்றும் இரண்டாவது கிலோமீட்டர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று (29) முதல் முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவும் என கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக முச்சக்கரவண்டி கட்டணமானது முதலாவது கிலோமீட்டருக்கு 120 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 100 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.