அண்மையில் கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) நிறைவேற்று சபையினால் எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு பொருத்தமான பெயர்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த வாரத்திற்குள் நிறைவேற்று சபை கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
சிவில் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரை புதிய தலைவராக நியமிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)